மாஸ்க் போட்டு தனியாக அமர்ந்த உதயநிதி.. மதுரை பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன!!

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் அமராதது பேசும் பொருளாக மாறி உள்ளது. திமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு மதுரையில் ஊத்தங்குடி பகுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்குழு மேடையில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் பெரியார் பேராசிரியர் அன்பழகன், உள்ளிட்டோரின் உருவப்படங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பொழுது மேடையில் முக்கிய நிர்வாகிகள், துணை பொதுச்செயலாளர் ஆகியோர் அமர்ந்திருந்தனர் அமைச்சர்கள் பலரும் கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். ஆனால் துணை முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் அமருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் மேடையில் அமராமல் அமைச்சர்களுடன் கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். இதற்கு என்ன காரணம் என பலரும் யோசனை செய்து வந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் மாஸ்க் அணிந்து கொண்டு காரில் தனியாக சென்றார் என கூறப்படுகின்றது.கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாஸ்க் அணிந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.