ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது. எந்த ஒரு சட்டமன்ற தேர்தலிலும் இல்லாத வேகம் 2026 தேர்தலில் இருக்கிறது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, அதிமுக, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவிலிருந்த முக்கிய தலைவர்கள் வெளியேற்றம், பாமகவில் ஏற்பட்டிருக்கும் தந்தை-மகன் பிரச்சனை போன்றவை அரசியல் களம் வேகமேடுதுள்ளதற்க்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.
அதிலும் முக்கியமாக அதிமுகவில் ஏற்பட்ட பிரிவும், அவர்கள் நால்வர் அணியாக உருவானதும் தான் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. இபிஎஸ் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதிலிருந்தே அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தான் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென செங்கோட்டையன் கூறினார். கட்சியின் நலனுக்காக ஒருங்கிணைய வேண்டும் என்று கூறிய செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து நீக்கினார் இபிஎஸ். இதனால் இபிஎஸ் மீது கட்சியின் தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பது தெரிகிறது.
எனவே அதிமுகவிலிருக்கும் தொண்டர்கள் பலரும், திமுகவில் இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து 10 வது முறையும் தோல்வியை சந்திக்க அதிமுகவினர் தயாராக இல்லாத காரணத்தினால், நாம் திமுகவாக மாறிவிட்டால் அது வெற்றியாக மாறிவிடும் என்கிற எண்ணம் அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது என்று கூறி இதனை உறுதிப்படுத்தியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ். இவரின் இந்த கருத்து அதிமுகவின் அழிவிற்கு ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது.

