2023 ஆம் ஆண்டு இறுதியில் பக்தர்கள் ராமர் கோவிலில் அனுமதிக்கப்படுகிறார்கள்! முழு வீச்சில் கட்டடப்பணி!

0
161

உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருந்ததாக தெரிவித்து அந்த மசூதி இடிக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு பலகாலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் அயோத்திய ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானில் பன்சி பாகற்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்களை குடைந்து கர்ப்பகிரகம் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ஒடிசாவின் கோனார்க் சூரிய கோவிலில் இருப்பதைப் போலவே சூரிய ஒளி கற்பகிரகத்தில் இருக்கின்ற ராமர் சிலை மீது விழுவதைப் போல வடிவமைக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் கற்பகிரகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

2023 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு இந்த கோவில் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாகசாலையில் யாகம் வளர்ப்பதற்காக தமிழகத்தைச் சார்ந்த பண்டிதர்கள் ஏற்கனவே அயோத்திக்கு விரைந்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Previous articleரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு 
Next articleஇரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது – திருமாவளவன்