விவாகரத்து வழக்கில் மனம் மாறிய தனுஷ்-ஐஸ்வர்யா!!போயஸ் கார்டனில் ரகசியம் மீட்டிங்!!

Photo of author

By Jeevitha

விவாகரத்து வழக்கில் மனம் மாறிய தனுஷ்-ஐஸ்வர்யா!!போயஸ் கார்டனில் ரகசியம் மீட்டிங்!!

Jeevitha

Dhanush-Aishwarya changed her mind in the divorce case!! Secret meeting at Boise Garden!!

Cinema news: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் பிரபல நடிகர் தனுஷ் இருவரும் விவாகரத்து வழக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டு இருவரும் இணைந்து வாழ்வதாக பரபரப்பாக செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த சில வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்வதாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். ஆனால் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தனுஷ் போயஸ் கார்டனில் தனி வீடு கட்டி குடி பெயர்ந்தார். இதனை தொடர்ந்து தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இருவரும் நேரில் ஆஜராகவில்லை.

அதே போல் 3 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இருவரும் சேர்ந்து வாழ விரும்புகின்றனரோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் போயஸ் கார்டனில் ரஜினி இல்லத்தில் ரகசிய மீட்டிங் நடந்துள்ளது. அதில் தனுஷிடம் மனம் விட்டு ரஜினிகாந்த் பேசியதால் தனுஷ், பரஸ்பரமாக இருவரும் சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

இதற்கான காரணம் ரஜினியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் ரஜினி மற்றும் அவரது ரசிகர்களும் உற்சாகமாக மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் போயஸ் கார்டனில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.