தனுஷ் தனிப்பட்ட வெறுப்பில் என்னை பழிவாங்குகிறார்!! நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு!!

Photo of author

By Jeevitha

Cinema News: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரின் திருமண காதல் கதையின் ஆவணப்படம் தற்போது வரும் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாக தாமதமானதற்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் என பகிரங்கமாக நயன்தாரா குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களின் திருமண ஆவணப்படம் ஏற்கனவே வெளியாக உள்ளது என கூறப்பட்டு இருந்தது. ஆனால் அந்த படம் வெளியாகாமல் தள்ளி போவதற்கு முக்கிய காரணம் தனுஷ் தடையாக இருந்தது என நயன்தாரா தனுஷ்க்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் சமீபத்தில் வெளியான ஆவணப்பட ட்ரெய்லர் நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 வினாடி காட்சிக்கு தனுஷ் ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். உங்கள் பழிவாங்கும் செயலில் நானும் எனது கணவரும் மட்டும் அல்லாமல் ஆவணப்படத்தில் பங்காற்றியவர்களும் பதிப்படைந்துள்ளார்கள் என கூறி உள்ளார்.

மேலும் நயன்தாராவின் காதல், நானும் ரௌடி தான் படம் நடிக்கும் போது தான் கண்டறிந்தேன் என அதில் குறிப்பிடுகிறார். மேலும் நீங்கள் அப்பாவி ரசிகர்களிடம் பேசுவது போல் எங்களிடம் ஒரு நிமிடம் கூட நடந்து கொள்ள முடியாது, எங்களுக்கு உங்களை பற்றி நன்றாகவே தெரியும் என கூறியுள்ளார். நீங்கள் ஒரு தயாரிப்பாளர் தானே தவிர அரசன் அல்ல. நாங்கள் சட்டபூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என கூறியுள்ளார்.