BJP AMMK: அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட டிடிவி தினகரன், இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து தனிக்கட்சி ஆரம்பித்தார். இதன் பின்னர் பாஜக கூட்டணியில் தொடர்ந்து வந்த இவர், அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த உடன், நயினாரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அமமுக பாஜக கூட்டணியில் இணையாது என்று திட்டவட்டமாக கூறி வந்தார். இவர் கூட்டணியிலிருந்து விலகிய உடன் இவருக்கு ஆதரவாக ஓபிஎஸ், சசிகலா போன்றோர் இருந்தனர். ஆனால் தற்போது இவர் தனித்து விடப்பட்டது போல் தெரிகிறது.
இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்ற கருத்துக்கு ஓபிஎஸ்யும் துணை நின்றதால் இவர்கள் இருவரும் ஒன்றாக பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஓபிஎஸ்யை அழைக்க, அவரும் டெல்லி சென்று அமித்ஷா உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் ஓபிஎஸ் டிடிவி தினகரனை விட்டு விலகி பாஜக உடன் சேரப்போகிறார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து தினகரனும் அமித்ஷாவை சந்திப்பார் என்ற சந்தேகம் எழுந்த போது, இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், நான் அமித்ஷாவை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. என்னை அழைக்கவும் மாட்டார்கள் நானும் சந்திக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் அதிமுகவை பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு, அதை பற்றி எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். பாஜகவின் பிடியில் அதிமுக இல்லையென்றால் அதனை இவர் நேரடியாக கூறி இருக்கலாம். அதனை தவிர்த்து தெரியாது என்று இவர் கூறிய பதில் அதிமுகவை பாஜக தான் இயக்குகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், நான் அமித்ஷாவை சந்திக்க மாட்டேன் என்று கூறியது பாஜகவிற்கும், இவருக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை எடுத்துக்காட்டியுள்ளது.

