அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார்! சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோ பேட்டி!!

0
315
#image_title
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார்! சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோ பேட்டி!
அடுத் ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று சென்னை அணியின் பயிற்சியாளர் பிரவோ பேசியது ரசிகர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவது குறித்து தோனியிடம் கேட்டபோது அவர் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவது குறித்து பதில்  அளிக்கவில்லை. சில கிரிக்கெடீ வீரர்கள் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூறி வந்தாலும் ஒரு சிலர் எம் எஸ் தோனி அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று கூறி வருகின்றனர்.
இதையடுத்து சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ அவர்கள் எம் எஸ் தோனி அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று கூறியுள்ளார்.
தோனியின் ஓய்வு குறித்து பயிற்சியாளர் டுவைன் பிராவோ அவர்கள் “அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி 100 சதவீதம் உறுதியாக விளையாடுவார். இந்த ஆண்டு கொண்டு வந்துள்ள இம்பேக்ட் பிளேயர் விதிமுறை தோனியை விளையாடவைக்கும். ரகானே, சிவம் தூபே இரண்டு பேரும் அணிக்கு வலிமையாக இருப்பதால் தோனியிடம் இருந்து எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால் கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது தோனிக்கு மட்டுமே தெரியும்” என்று அவர் கூறினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் குவாலிபையர் சுற்றில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Previous articleதளபதி 68 படத்தின் ஹீரோயின் இவங்களா? வெங்கட் பிரபு சாய்ஸ்!!
Next articleநயன்தாரா பெரிய மல்டிபிளெக்ஸ் தியேட்டர் கட்டுகிறாரா உண்மை இதுதான்