இது தவறான முன்னுதாரணத்தை காட்டுகிறது! முதல்வரை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

0
121

திமுக ஆட்சிபொறுப்பையேற்றத்திலிருந்து திமுகவுக்கும் , 7 ம் பாஜகவிற்கு பொருத்தமாகவே இருக்கிறது .அதற்கு முன்பும் கூட திமுகவிற்கு பாஜகவுடன் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லலாம்.

எப்பொழுதும் பாஜகவை எதிர்ப்பதையே தன்னுடைய முழு நேர வேலையாக பார்த்து வருகிறது திமுக. அதேபோல பாஜகவும் திமுக தான் தன்னுடைய முதல் எதிரி என்பதை போல செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்து விட்டுத்தான் முதலமைச்சராக பதவி ஏற்றார் என்பது சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அணணாமலை தெரிவித்திருக்கிறார்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் விடுதலை செய்தது.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையிலிருக்கும் மற்ற 6 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு கிடையாது என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து உரையாற்றிய அண்ணாமலை பாஜகவை பொருத்தவரையில் எல்லோருமே குற்றவாளிகள் தான். காங்கிரஸ் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. சிறையிலிருந்து வெளிவந்தவரை கொண்டாடுவது தவறான முன்னுதாரணத்தை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

நீதிமன்ற உத்தரவின் பெயரில் பேரறிவாளன் நிரபராதி என எங்கும் குறிப்பிடப்படவில்லை, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கிறார்கள் நிரபராதியை விடுவித்தது போல முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நடந்துகொள்கிறார்கள்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்து விட்டுத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றாரா? என்பது சந்தேகத்தை கிளப்புகிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆளுமை இருந்தால் திமுகவுக்கு கொடுத்திருக்கும் ஆதரவை திரும்பப் பெறவேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.