உங்களுக்கு கொரோனா வந்ததா? அப்போ நீங்க இந்த விசயத்தில் எச்சரிக்கையாக வேண்டும்!

Photo of author

By Hasini

உங்களுக்கு கொரோனா வந்ததா? அப்போ நீங்க இந்த விசயத்தில் எச்சரிக்கையாக வேண்டும்!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது அதன் இரண்டாம் அலையின் பாதிப்போ மிக கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த தொற்றின் காரணமாக உயிரிழப்புகளும் பெருமளவு ஏற்பட்டு மக்களை மிகவும் வாட்டி வருகிறது. இதற்கான தடுப்பாக தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தினாலும், மக்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகளவு ஏற்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றை தொடர்ந்து கரும் பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்றுக்கள் மக்களுக்கு ஏற்பட்ட நிலையில், தோல் தொற்றுக்களும் தொடர்ந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கரும் பூஞ்சை நோயால் பாதிக்கப் பட்டோருக்கு கண் பார்வை பரி போகும் துயர சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கான மருந்துகள் வந்தாலும் தொற்று பாதிப்பு என்னவோ தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தற்போது மருத்துவர்கள் புதிதாக கொரொனோ தொற்று பாதித்தோருக்கு காது கேளாமை குறைப்பாடுகள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சிலர் காதுகளில் இரைச்சல் அல்லது விசில் போன்ற சப்தம் கேட்பதாகக்கூறி டெல்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி அம்பேத்கர் மருத்துவமனை புள்ளி விபரங்களின் படி கடந்த 2 மாதங்களில் காது கேளாமைக் கோளாறினால் 15 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் பெருந்தொற்றிலிருந்து மீண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

எனவே பெருநோயிலிருந்து மீண்டவர்கள் காதுகளில் வலி அல்லது வேறு பிரச்னைகள் இருந்தால் அடுத்த 72 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். தாமதமானால் செவித்திறன் முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.