குறத்தி மகன் படத்தில் கமலஹாசன்! அவரைப் பார்த்துள்ளீர்களா!

0
355
#image_title

1972 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், கே ஆர் விஜயா, சுருளி ராஜன், வி எஸ் ராகவன் ஆகியோர் நடித்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கிய திரைப்படம் தான் குறத்தி மகன். இந்த படம் ஒரு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது என்றே கூறலாம்.

 

ஆனால் முதலில் குறத்தி மகன் படத்திற்கு சந்திரபாபு மற்றும் பத்மினி ஆகியோரும் அவருக்கு மகனாக சிவகுமாரும் நடித்திருந்தனர். ஆயிரம் ரீல் மேல் படத்தை எடுத்துவிட்டு விநியோகத்திற்கு போட்டு காமிக்கும் பொழுது அவர்களுக்கு திருப்தி இல்லை. முழு படத்தையும் இவர்களைப் பற்றியே எடுத்தால் படம் ஓடாது என்று விநியோகித்தர்கள் சொல்லிவிட்டார்கள் அதனால் இந்த படம் கைவிடப்பட்டது.

 

பிறகு ஆதிசங்கரின் கதையை படமாக்கலாம் என நினைத்திருந்த கோபாலகிருஷ்ணன் அவருக்கு அதுவும் நன்மை தரவில்லை. அதனால் குறத்தி மகனையே தொடரலாம் என்று நினைத்தார்.

 

அப்பொழுது பத்மினி திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதால். எடுத்த ஆயிரம் பட ரிலை கெடாசி விட்டு மறுபடியும் ஜெமினி மற்றும் கே ஆர் விஜயா மாஸ்டர் ஸ்ரீதர் மகனாக வைத்து படம் எடுக்கப்பட்டது.

 

முதலில் மகன் கதாபாத்திரத்திற்கு கமலஹாசன் அவர்களே முதல் சாய்ஸாக இருந்தாராம். பின் அவரது குரல் சரியாக இல்லை என்பது காரணமாக அந்த படத்தில் ஒரு சிறிய ரோலில் அவர் வருவார்.

 

இப்பொழுதும் அந்த படத்தை பார்த்தீர்கள் என்றால், மாஸ்டர் ஸ்ரீதர் கல்லூரியில் மாணவர் சங்க தலைவனாக தேர்ந்தெடுக்கப்படுவார் அப்பொழுது உரையாற்றும் பொழுது பின்னே கமலஹாசன் இருப்பார். மாஸ்டர் ஶ்ரீதர் பேசும்பொழுது பின்னே ஒரு கோட் சூட் போட்ட ஒரு இளைஞன் வருவார். அது கமலஹாசன் தான்.

#image_title
Previous articleஎம்ஜிஆரை கால் கடுக்க நிக்க வைத்த பாகவதரின் மனைவி! பழிவாங்கிய எம்ஜிஆர்
Next articleதமிழ்நாட்டைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் உட்டபட  3 பேருக்கு பத்ம விருதுகள்!!