இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது கிரிப்டோ கரன்சி! 9 வங்கிகளில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Photo of author

By Sakthi

இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருப்பது நாணயமும் பணமும் தான் தற்போது மாறிவரும் நவீன யுகத்திற்கு ஏற்றவாறு கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடுகளும் உலக அளவில் அதிகரித்து வருகிறது.

நைநிகர் நாணயம் என்று அழைக்கப்படும் கிரிப்டோ கரன்சிகள் பயன்பாடு இன்றைய தலைமுறையினர் இடையே வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அந்த விதத்தில் இன்று சோதனையின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது.

அரசின் பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்படுவதால் இதன் வெற்றியை வைத்து மற்ற பரிமாற்றங்களுக்கு டிஜிட்டல் கரன்சி பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடக் மகேந்திரா, எஸ் பேங்க், ஐ டி எப் சி பர்ஸ்ட் வங்கி, ஹெச் எஸ் பி சி உள்ளிட்ட 9 வங்கிகள் டிஜிட்டல் கரன்சியை இன்று வெளியிட இருக்கிறார்கள். டிஜிட்டல் நாணயத்தின் சில்லறை பயன்பாடும் ஒரு மாதத்தில் கொண்டுவரப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் இந்த கரன்சியை வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கும் போது பண பரிமாற்றத்திற்கு எளிதாகவும், வேகமாகவும் டிஜிட்டல் நாணயம் இருக்கும். தற்போது வங்கியில் நாம் ரூபாய் நோட்டுக்களை இருப்பு வைத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த டிஜிட்டல் நாணயங்கள் பெரிதாக வேறுபட்ட ஒன்றல்ல என்றும் டிஜிட்டல் வடிவில் மட்டுமே இன்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள், கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு கூடவோ, குறையவோ செய்யாது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.