AMMK BJP: பாஜக கூட்டணியில் இருந்து வந்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினாலும், கூட்டணியில் இபிஎஸ்க்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலும் பாஜக கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்தனர். இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக தொடரும் வரை பாஜகவில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்று டிடிவி தினகரன் ஆணி தனமாக கூறி வந்தார். கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியதால் அவர் தினகரனின் கட்சியான அமமுகவில் இணைந்து செயல் படுவார் என்று நினைத்த சமயத்தில், ஓபிஎஸ், செங்கோட்டையன், தினகரன், சசிகலா போன்ற நால்வரும் ஒரு அணியாக உருவெடுத்தனர்.
அதனால் இந்த அணி ஒன்றாக இணைந்து இபிஎஸ்யை வீழ்த்துவதற்கான பணிகளை செய்யும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர். இந்த செய்தியெல்லாம் பொய் என்று நிரூபிக்கும் படி ஓபிஎஸ் ஒரு தகவலை கூறியுள்ளார். மீண்டும் NDA கூட்டணியில் இணைவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் இந்த கூற்று தினகரனை விட்டு விலகுவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பாஜகவிலிருந்து விலகிய இருவரும், ஒன்றாக இணைந்து பயணிப்பார்கள் என்று அனைவரும் நினைத்தனர்.
அது மட்டுமல்லாமல், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத தினகரனின் கருத்துக்கு ஓபிஎஸ்யும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்ததால், முதல்வர் வேட்பாளரை மாற்றும் வரை இருவரும் பாஜகவில் இணைய மாட்டார்கள் என்ற கருத்தும் வலுப்பெற்றது. ஆனால் தற்போது பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது என்று ஓபிஎஸ் கூறியதால் இவர்கள் இருவரும் இன் தனி தனி பாதையில் பயணிக்க போகிறார்கள் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, யார் பாஜகவில் இணைந்தாலும் தான் இணைய போவதில்லை என்பதில் தினகரன் உறுதியாக உள்ளார் என்று அமமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

