யூரோ கால்பந்து போட்டி! 53 ஆண்டுகளுக்குப் பின்னர் சாதித்த இத்தாலி!

Photo of author

By Sakthi

யூரோ கால்பந்து தொடரில் கோப்பையை தட்டிச் சென்றது இத்தாலி அணி லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெனால்டி ஷாட் அவுட் முறையில் இங்கிலாந்து நாட்டை விழுத்தியது இத்தாலி.

ஐரோப்பிய அணிகளுக்கு இடையில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. லண்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து தன்னுடைய சொந்த நாட்டின் ஏழாவது இடத்தில் இருக்கின்ற இத்தாலி நாட்டை நேருக்கு நேர் சந்தித்தது போட்டி ஆரம்பித்த ஒரு நிமிடம் 55 வினாடிகள் பின்தள வீரர் ட்ரிப்பியர் பந்தை இத்தாலி பகுதியில் அடித்திருக்கிறார். அந்தப் பகுதியில் இருந்த லூசா அந்த பந்தை அப்படியே கோலாக மாற்றி விட்டார்.

யூரோ வரலாற்றிலேயே அடிக்கப்பட்ட அதிவேக கோல் என்ற பெருமை இந்த கோலிற்கு கிடைத்திருக்கிறது. முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1 0 என்ற நிலையில் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் இங்கிலாந்து கோல் பகுதிக்குள் புகுந்த இத்தாலி வீரர் அடித்த பந்து கோல் பகுதியில் பட்டு திரும்பி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட இத்தாலி 66 ஆவது நிமிடத்தில் மறுபடியும் திருப்பி அடுத்து வலைக்குள் தள்ள ஒட்டுமொத்த மைதானமும் அதிர்ச்சிக்கு உள்ளானது. ஆட்டத்தின் முடிவில் ஒன்றுக்கு ஒன்று என ஆட்டம் சமன் ஆனது. இந்த நிலையில், கூடுதல் நேரத்திற்கு சென்றது 30 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் இரண்டு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்த சமயத்தில் மூன்றுக்கு ஒன்று என்ற நிலையில் சமனில் நீடித்தது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வெற்றியாளரை முடிவு செய்ய பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. அசத்திய இத்தாலி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைந்து இந்த தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்ற 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இத்தாலியை இங்கிலாந்து அணி இதுவரையில் வெற்றி பெற்றதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 4 ஆட்டங்கள் தோல்வி மற்றும் சமநிலை இருக்கிறது என்ற சோகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.யூரோ கால்பந்து தொடரில் 53 வருடத்திற்கு பின்னர் மறுபடியும் கோப்பையை வெற்றி பெற்றிருக்கிறது இத்தாலி இதற்கு முன்னர் 1968-ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் சாத்தியிருந்தது இத்தாலி.

இந்த நிலையில், சர்வதேச அரங்கில் இத்தாலி அணி தொடர்ச்சியாக 34 போட்டிகளில் தோல்வி அடையாமல் 28 வெற்றி மற்றும் 6 போட்டிகளில் சமன் என்ற சூழலில் இருக்கிறது. கடைசியாக 2018ஆம் ஆண்டு போர்ச்சுகலிடம் வீழ்ந்து இருக்கிறது இந்த நிலையில், யூரோ கோப்பை வெற்றி பெற்ற அணிக்கு ரூ 103 கோடி ரூபாய் பரிசாக கிடைத்திருக்கிறது. தோல்வி அடைந்த இங்கிலாந்து அணிக்கு 7 2.48 கோடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.