அதிமுக-வுடன் கூட்டணி வைக்க 100 கோடி கேட்கிறார்கள்!! உண்மையை போட்டுடைத்த உடைத்த முன்னாள் அமைச்சர்!!

Photo of author

By Sakthi

AIADMK:தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சியினர் 100 கோடி மற்றும் 20 வது  தொகுதி சீட்கள் கேட்பதாக பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். அதன் பிறகு அதிமுக TTV தினகரன், ஓ. பன்னீர் செல்வம் என மூன்று துண்டுகளாக உடைந்தது. கடந்த தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பாஜக கூட்டணியில் இருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை விடுத்து அதிமுக தனித்து கூட்டணி அமைத்தது.

இந்த தேர்தலில் தோல்வியை தழுவியது. இதனால் வருகின்ற 2026 தேர்தலில் கட்டாயம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் உள்ளது அதிமுக. இதனால்  எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு  ஒரு தெளிவான முடிவை கொடுக்காமல் இருந்தார், மேலும் திமுகவுக்கு எதிராக உள்ள கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைக்கும், கொள்கை ரீதியாக ஒத்து போகிற கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என்ற பதிலை தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் தான்  திருச்சியில் அ.தி.மு.க., மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கள ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா மற்றும் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்.  இந்த கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

அதில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சியினர் 100 கோடி மற்றும் 20 வது தொகுதி சீட்கள் கேட்பதாக பகிரங்கமாக தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.