ஏற்பட்ட திடீர் மரணம் சோகத்தில் திரையுலகினர்!

Photo of author

By Sakthi

ஏற்பட்ட திடீர் மரணம் சோகத்தில் திரையுலகினர்!

Sakthi

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், மகராசன், போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஜி என் ரங்கராஜன். இவர் இன்று காலை 8.30 மணியளவில் அவருடைய வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய மகன் ஜிஎன்ஆர் குமரவேலன் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார்.

இந்த சூழ்நிலையில், பிரபல இயக்குனர் j16 ரங்கராஜன் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்சமயம் அவருடைய மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வருடத்தில் பல திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கிறார்கள். அதோடு நாள்தோறும் மரண செய்திகள் வந்த வண்ணம் தான் இருந்து வருகிறது. இது திரைத்துறை ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. நேற்று நடிகரும் தயாரிப்பாளருமான ஜி ராமச்சந்திரன் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.