தலைவர் 169! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்!

0
236

தமிழகத்திரைவுலகில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி சிறந்த இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் நெல்சன்.

இவர் நயன்தாரா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரை வைத்து இயக்கிய கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர், உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய வெற்றி படங்களாக பார்க்கப்படுகின்றன.

இதனைத்தொடர்ந்து தமிழக திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரஜினி நடிக்கும் 169வது திரைப்படத்தை இவர் இயக்க ஒப்பந்தமாகிஒப்பந்தமாகியிருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இவர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கூட அந்தத் திரைப்படம் தொடர்பான சில விமர்சனங்கள் பலராலும் பகிரப்பட்டு வந்தது. இதனால் ரஜினிகாந்த் திரைப்படத்தை நெல்சன் இயக்குவது சந்தேகம் தான் என்று சில வதந்திகள் உலாவத் தொடங்கினர்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தன்னுடைய வலைத்தளத்தில் தன் இயக்கத்தில் உருவான திரைப்படங்களின் பட்டியலில் தலைவர் 169தையும் சேர்த்திருக்கிறார்.

ஆகவே இதன் மூலமாக ரஜினிகாந்த் திரைப்படத்தை இயக்குவதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அவர் உறுதி செய்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleஇன்ப அதிர்ச்சி தருவதாக வருங்கால கணவருக்கு போன் செய்த மணமகள்! மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Next articleதிடீரென்று அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! மாவட்ட நிர்வாகங்களுக்கு பறந்த பரபரப்புக் கடிதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here