புதிய சிக்கலில் மாட்டிய இயக்குநர் சங்கர்! அந்த காட்சியை நீக்கியே ஆக வேண்டும் என்று கோரிக்கை! 

Photo of author

By Sakthi

புதிய சிக்கலில் மாட்டிய இயக்குநர் சங்கர்! அந்த காட்சியை நீக்கியே ஆக வேண்டும் என்று கோரிக்கை!!
சமீபத்தில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர். மனோபாலா வரும் காட்சியை நீக்க வேண்டும் என்று. இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு இ-சேவை உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவான இந்தியன் 2 திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூலை 12ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், ஜெகன், நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தியன் 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இருப்பினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தியன் 2 திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் மனோபாலா அவர்கள் வரும் காட்சியை நீக்க வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு இ-சேவை உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நல சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதாவது இ-சேவை மைய உரிமையாளர்கள் நல சங்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் தன்ராஜ் அவர்கள் “இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் மனோபாலா அவர்கள் நடித்துள்ள காட்சியில் 300 ரூபாய் குடுத்தால் தான் சேவை செய்வோம் என்று கூறப்பட்டுள்ளது. தவறுதலாக சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட இந்த காட்சிகளை இந்தியன் 2 படத்திலிருந்து நீக்க வேண்டும்.
இப்படி தவறாக சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட காட்சிகளினால் தமிழகத்தில் இருக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ-சேவை மைய உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. மேலும் அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கின்றது.
இதையடுத்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியரிடம் இ-சேவை மைய உரிமையாளர்கள் நல சங்கம் சார்பாக இயக்குநர் சங்கர் மீது புகார் மனு அளிக்கப்படும். மேலும் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அது மட்டுமில்லாமல் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் மனோபாலா வரும் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்படும்” என்றும் அந்த கூட்டத்தில் பேசினார்