மது விடுதிக்கு ஓனரான இயக்குனர் வெங்கட் பிரபு.. விரைவில் திறப்பு விழா!!

Photo of author

By Madhu

மது விடுதிக்கு ஓனரான இயக்குனர் வெங்கட் பிரபு.. விரைவில் திறப்பு விழா!!

Madhu

director-venkat-prabhu-to-open-a-liquor-store-soon

வெங்கட் பிரபு இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் விஜய் நடித்த கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை பெற்றது. மேலும் அந்தத் திரைப்படம் 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

அந்த திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கின்றார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு முன்னதாகவே மதராசி மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருவதினால் இவருக்கு கால் சீட் கிடைப்பதில் சற்று தாமதமானது.

இந்நிலையில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வரும் நிலையில் அது தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளது. இதனை தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வரும் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் சிக்கலில் சிக்கி உள்ளது. அதனால் தற்போது சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவை அழைத்து முழு திரைக்கதையையும் தயார் செய்யுங்கள் விரைவில் படப்பிடிப்பை தொடங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் ஒரு பழைய ரெஸ்ட்டோபார் விலைக்கு வந்த நிலையில் அதனை வெங்கட் பிரபு வாங்கியுள்ளார். அந்த மது கடையை புதுப்பிக்கும் பொறுப்பை கலை இயக்குனர் ராஜீவனிடம் கொடுத்துள்ளார். வெங்கட் பிரபு விரைவில் அந்த ரெஸ்ட்டோபருக்கு திறப்பு விழா நடத்த இருக்கின்றார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.