அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்!! அமரன் படம் பார்த்த இயக்குனர் நச் பதில்!!

Photo of author

By Sakthi

cinema:அமரன் படத்தை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ராஜ் கமல் தயாரித்து சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகியுள்ள படம் தான் அமரன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 31 அன்று வெளியானது. உலக அளவில் முதல் மூன்று நாட்களில் 100 கோடி வசூல் செய்தது.

மேலும் மக்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும். தமிழக முதல்வர் தன்குடும்பத்துடன் அமரன் படம் பார்க்க சென்றார். முதல்வரை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் இப் படத்தை பார்த்து தங்களது கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தந்து எக்ஸ் தளத்தில் அமரன் படம் குறித்த தனது கருத்தை தெரிவித்தார்.

அப் பதிவில் அமரன் படத்தில் வலி மிகுந்த நிறைய காட்சிகள் இடம் பெற்று உள்ளது . மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் இது சிறந்த படமாக இருக்கும், மேலும் அமரன் படத்தில் முகுந்த் வரதராஜன் தனது அப்பாவிடம் புது வீடு கட்ட வேண்டும் என்று கேட்கும் காட்சிகளை பார்த்து நாம் வெட்கப்பட வேண்டும் என்றும், நம் நாட்டின் ராணுவ வீரர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

இப் படத்தை பார்த்து அவர்களுக்கு சம்பள உயர்வை தரவேண்டும் என்றார். அதற்காக நான் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்று பதிவிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.