அஜித் குமாரை  வைத்து பான் இண்டியா மூவி எடுப்பேன்!!இயக்குனர் விஷ்ணுவர்தன் குட் நியூஸ்!!

Photo of author

By Sakthi

அஜித் குமாரை வைத்து பாகுபலியை விட பெரிய படம் எடுப்பேன் இயக்குனர் விஷ்ணுவர்தன் அறிவிப்பு.

கடந்த 2007 ஆம் ஆண்டு  விஷ்ணுவர்தன்  இயக்கத்தில் வெளியான படம் தான் “பில்லா”. இந்த படத்தில் அஜித் குமார், நமீதா, நயன்தாரா, பிரபு என தமிழ் திரைப் பிரபலங்கள் நடித்து இருந்தார்கள் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக இவர் இயக்கத்தில் வெளியான “சர்வம்” பெரிதாக ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை.

எனவே அதன் பிறகு விஷ்ணுவர்த்தன் திரை உலகை விட்டு சற்று விலகி இருந்தார். இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் அவர் இயக்கி இருந்த
‘நேசிப்பாயா’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது. இது தற்போது 1.6 மில்லியன் வீயூவ்ஸ்ர்களை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் உள்ள பாடல் ஒன்று ஒரு மதத்திற்கு முன் வெளியானது. இது யூடியூப் வலைதளத்தில் சுமார் 3.6 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி இருக்கிறது.

இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த விஷ்ணுவர்தன் தனது அடுத்த படம் குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் “பில்லா” படம் எடுத்தேன். அது மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது அதன் பிறகு “சர்வம்” திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. இதனால், தெலுங்கு சினிமாவுக்கு சென்று விட்டேன். எனக்கு அங்கு வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு மும்பை வீடு வாங்கி செட்டில் ஆனேன். தற்போது அந்த வீட்டை விற்று விட்டு தமிழ் சினிமாவுக்கு வந்து இருக்கிறேன்   என்று கூறி இருந்தார். மேலும் நடிகர் அஜித் குமாரை வைத்து பாகுபலி திரைப்படம் போல பிரம்மாண்டமான படம் எடுக்க வேண்டும் என இருப்பதாக தெரிவித்து இருந்தார் என தகவல் வெளியானது அது உண்மை தகவலா என தெரியவில்லை.