அருவியில் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம்! சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி!

Photo of author

By Sakthi

தற்போது தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.அதேபோல கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் பருவமழை தொடங்கியுள்ளதால் மழை பொழிந்து வருகிறது.ஆனால் இதன் காரணமாக, விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பருவமழை தான் என்றாலும் கூட அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற கூற்றினடிப்படையில் அளவுக்கதிகமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்திருக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், பருவ மழையின் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல் அருவியில் கோடை விடுமுறை என்ற காரணத்தால், தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்தது.

இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அறிவியில் பரிசல் இயக்குவதற்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆகவே கோடை விடுமுறையை கழிப்பதற்காக திட்டமிட்ட சுற்றுலா பயணிகள் தற்போது ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.