ரேஷன் கார்டு இருக்கா.. இந்த வாய்ப்பை விட்டுடாதீங்க உடனே செல்லுங்கள்!! தமிழக அரசு போட்ட அதிரடி நடவடிக்கை!!

Photo of author

By Jeevitha

 

 

ரேஷன் கார்டு இருக்கா.. இந்த வாய்ப்பை விட்டுடாதீங்க உடனே செல்லுங்கள்!! தமிழக அரசு போட்ட அதிரடி நடவடிக்கை!!

வழக்கமாக பொதுமக்கள் தங்கள்  கோரிக்கைகளையும், புகார்களையும் தமிழக அரசின் கீழ் நடத்தப்பட்டு வரும் குறைதீர் கூட்டங்கள், முகாம்கள் ஆகியவற்றின் மூலம் மனுவாக எழுதி உரிய அலுவலர்களிடம் கொடுத்து பயனடைந்து வருகிறார்கள்.

இந்நிலையின் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்களும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியர் கலைச் செல்வி  மோகமன் அவர்களும் அந்தந்த மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு பொன்னான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆகஸ்டு மாதம் 10 ஆம் நாளான இன்று காலை 10 மணி அளவில் அந்தந்த மாவட்டங்களின் தாலுக்காக்களில்  பொது விநியோக திட்டத்தின் குறைதீர் முகாம் நடைபெறும்.

இந்த குறைதீர் கூட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட  பகுதிகளான குடியாத்தம் பகுதியில் உள்ள  ஏரிப்பட்டரை, கே. வி. குப்பம் பகுதியில் உள்ள திருமணி, வேலூர் தாலுக்காவில் அமைத்துள்ள சதுப்பேரி, பேராணம்பட்டு பகுதியின் கார்கூர், காட்பாடி தாலுக்காவின் தீயாற்குப்பம் மற்றும், அணைக்கட்டு தாலுக்காவில் அமைந்துள்ள முத்துக்குமரன்மலை போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பின்படி,  குன்றத்தூர் தாலுக்காவில் அமைந்துள்ள மலையம்பாக்கம், வாலாஜாபாத் பகுதில் அமைந்துள்ள மாகறல், ஸ்ரீ பெரும்புதூர் தாலுக்காவில் உள்ள பிள்ளைப்பாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள விசூர், காஞ்சிபுரம் தாலுக்காவில் அமைந்துள்ள கூரம் ஆகிய காஞ்சிபுரம் மாவட்டத்திரற்குட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெறும் பொது விநியோக திட்டத்தின் குறைதீர் முகாமில் கலந்து கொண்டு தாங்கள் வைத்திருக்கும் ரேஷன் அட்டையில் குறைகள் இருப்பின் அதனை சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசானது மக்களின் குறைகளை அவ்வப்போது கண்டறிந்து தீர்ப்பதற்காகவே குறைதீர் முகாம்களை நடத்தி வருகின்றது. தமிழகத்தில்  மின்சார துறை, விவசாயத் துறை, பொது விநியோக துறை போன்ற துறைகளின் மூலம் அந்தந்த சமயங்களில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு மக்களில் கோரிக்கைகள் அரசுக்கு முன்வைக்கப்படுகிறது. இதே போல் இன்று நடைபெறும் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களின் பொது விநியோக திட்ட குறைதீர் முகாமில் கல்ந்துகொள்ள விழையும் மக்கள் தங்களுடைய குறிப்பிட்ட ஆவணங்களை கொண்டு வருதல் அவசியம்.

இந்த முகாமில் குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் அட்டையில் உள்ள பெயர் சேர்த்தல், நீக்குதல், திருமணமானவர்களின் பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல், முகவரி மாற்றம், குழந்தைகளின் பெயரை சேர்த்தல், இறந்தவரின் பெயரை நீக்குதல் போன்ற பல்வேறுபட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.