தரமாட்டல்ல? இப்போ என்ன பன்றனு பாரு! கணவன் செய்த செயலால் சேலத்தில் பரபரப்பு!

Photo of author

By Kowsalya

மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி தர மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னசேலம் அருகே பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் மந்தைவெளி என்ற பகுதியை சேர்ந்தவர் கண்ணாமனி. இவருக்கு வயது 58. இவர் வீட்டிலேயே டெய்லர் பணி செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா. இவருக்கு சரத்குமார் என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன் கண்ணாமணிக்கு சாலை விபத்து ஏற்பட்டது. அப்போது இவரது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. அதனால் இவரால் டைலர் தொழிலையும் செய்ய முடியவில்லை என்று சொல்லபடுகிறது. மேலும் மனமுடைந்த கண்ணாமணி குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார்.
இவரால் எந்த ஒரு வேலைக்கும் செல்ல முடியாததால் அமுதா தான் குடும்ப பொறுப்பை ஏற்று நடத்தி வந்துள்ளார். அமுதா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

சம்பவத்தன்று மாலை கூலி வேலைக்கு சென்று வந்த அமுதாவிடம் குடிக்க பணம் கண்ணாமணி கேட்டு வற்புறுத்தியுள்ளார். அமுதா பணம் தர மறுத்துள்ளார். தருவியா? மாட்டியா? என நீண்ட நேரம் போராடிய கண்ணாமணி வீட்டிற்கு வெளியே சென்ற பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உள்ளார்.
பெட்ரோல் ஊற்றிக்கொண்டு அலறல் சத்தம் கேட்டு அமுதா வெளியே வந்து பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே தீயை அணைத்துள்ளார் அமுதா. உடனே அமுதா கண்ணாமணியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மற்றும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கண்ணாமணி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு உள்ள மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசார் இந்த விவரம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.