மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு!

Photo of author

By Sakthi

திமுகவின் மாவட்ட செயலாளர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்த இருக்கிறார் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டசபையில் அனைத்து கட்சிகளின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் அதற்காக சட்டசபையை கூட்ட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கின்றார்.

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை செய்ய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி மூலமாக நடைபெறுகின்றது இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்க பட்டிருக்கின்றது.

இதுகுறித்து திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் மூன்றாம் தேதியான இன்று காலை 10.30 மணியளவில் காணொளி மூலமாக நடக்கிறது இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கின்றார்.