இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்:? முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்?

Photo of author

By Pavithra

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் மேற்கு மலைத்தொடர் தொடர் மாவட்டங்களில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.இதனால் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விதித்தது சென்னை வானிலை மையம்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது கூறியுள்ள தகவலின்படி இன்று நீலகிரி, கோவை,ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,தேனி மாவட்டத்தில் ஒரு சில இடத்தில் பலத்த மழையும்,சேலம்,ஈரோடு, தர்மபுரி,கிருஷ்ணகிரி திருவாரூர்,குமரி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் அதிகபட்சமாக 34சென்டி மீட்டர் மழையும்,கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழையும் பெய்தது குறிப்பிடத்தக்கது.