என்ன பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் ஜெனிபருக்கு ரகசிய திருமணமா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Photo of author

By Sakthi

விஜய் தொலைக்காட்சியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக விளங்கி வருவது பாக்கியலட்சுமி தொடர் இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் இந்த தொடரில் ஜெனிஃபர் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாலா திரைப்படத்தின் வில்லன் மற்றும் தயாரிப்பாளரான ஆர்கே சுரேஷ் அவர்களை காதலித்ததாகவும் நாங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், தெரிவித்திருந்தார் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் ஜெனிஃபர் என்ற திவ்யா.

இருந்தாலும் ஒரு சில மாதங்களில் இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக பிரிந்து விட்டதாகவும், திவ்யா தெரிவித்திருக்கின்றார். அதற்குப் பின்னர் சென்ற வருடம் ஆர்கே சுரேஷிற்கு ரகசிய திருமணம் நடைபெற்றது. இதில் 15 நபர்கள் மட்டுமே பங்கேற்றார்கள்.

நோய் தொற்று காலம் என்ற காரணத்தால் யாரையும் அழைக்காமல் ரகசியமாக திருமணம் நடைபெற்றது என்றும், தெரிவிக்கப்படுகிறது. ஆர்கே சுரேஷ் தமிழ்சினிமாவில் தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மருது என்ற திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து இருந்தார். ரோலக்ஸ் பாண்டி என்ற கதாபாத்திரம் மக்கள் இடையில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு திவ்யா மற்றும் சுரேஷ் அவர்கள் இருவரும் என் மனம் ஒத்து பிரிந்து விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. தற்சமய ஆர்கே சுரேஷ் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் இறங்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.