டிகர் சத்யராஜின் மகள் திவ்யா. சென்னையில் பிரபல ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் இவர். சமீபத்தில் தன்னை திமுகவுடன் இணைத்துக்கொண்டார். அதோடு, பல திமுக மேடைகளிலும் தொடர்ந்து பேசி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரு மேடையில் பேசியபோது விஜயை வம்பிழுத்தார்.
உதயநிதி சாரை பற்றி பேசுவது எனக்கு பெருமை. அவர் ஒன்றும் ஏசி கேரவானிலும், தோழியோடு விமானத்திலும் செல்லும் அரசியல்வாதி இல்லை. மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை எனில் உடனே இறங்கி வேலை செய்வார். பாஜக அரசிடமிருந்து தமிழகத்தை காக்க வந்த மாமன்னன் அவர். அவரை எதிர்த்து யார் எங்கு நின்றாலும் டெபாசிட் போய்விடும். அவர் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு ஹீரோ’ என பேசினார்.
இதையடுத்து ‘உங்களுக்கு மேடைப்பேச்சு சுத்தமாக வரவில்லை. அதை கற்றுக்கொண்டு மைக் முன்பு வாருங்கள். விஜய்யின் அரசியல் மீது விமர்சனம் வையுங்கள். அவர் யாருடன் விமானத்தில் சென்றார். யாருடைய கல்யாணத்திற்கு சென்றார் என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போல பேசுவது எதற்கு?’ என பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இப்போது அஜித்தை பற்றி பேசியிருக்கிறார் திவ்யா. எனக்கு அஜித் சாரை மிகவும் பிடிக்கும். அவருன் நான் போட்டோ எடுத்துவிட்டு அதன்பின் ஒரு வேலமாக ஒரு விஷயம் பண்ணா என்னை கைது செய்யலாம். ஆனால், இதுல அஜித் சாருக்கு பங்கு இல்ல. அவரிட்ட போய் நீங்க எதுவும் கேட்க கூடாது. அதேமாதிரி, திமுக கட்சி கொடியை கார்ல வச்சிக்கிட்டு ஒருத்தர் தப்பு பண்ணா அதுக்கு கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும். திமுகதான் அதுக்கு காரணம் என நீங்க நினைச்சா அது முதிர்ச்சியற்ற விஷயம்’ என பேசியிருக்கிறார்.