2 மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்கணுமாம் அதை மீறினால்….! காவல்துறை கடும் எச்சரிக்கை!

0
251

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக தமிழக காவல்துறையினர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், 125 டிசி பல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

பெட்ரோல் பங்க், எரிபொருள் கிடங்குகள் குடிசை பகுதிகளில் வான வேடிக்கை நிகழ்த்தவும் பட்டாசுகளை கொளுத்தவும் தடைவிக்கப்பட்டுள்ளது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு மருத்துவமனை, பள்ளி நீதிமன்றம் மற்றும் வழிபாட்டு தலங்களில் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கும் பட்டாசு பொருட்களை பேருந்து மற்றும் ரயில் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தீபாவளி தினத்தன்று உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரையிலும் இரவு 7:00 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

ஆனால் எந்த விதமான வாகனங்களிலும் பட்டாசுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்று காவல்துறையினர் தெரிவித்திருப்பது பட்டாசு வியாபாரிகளிடையே கவலைகளை அதிகரித்திருக்கிறது.

Previous articleஅடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Next articleஎன்ன புதிய புயல் உருவாகுதா? ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை எந்தெந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here