நாட்டில் மிக கோலாலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி புத்தாடை அணிந்து, விதவிதமான இனிப்புகள் செய்து பட்டாசுகள் வெடித்து குதூகலமாக கொண்டாடப்படும் இந்த நாளில் லட்சுமி தேதியின் அருளால் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்று நினைப்பது வழக்கம்.
இது போன்றவர்களுக்காக மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இயால் கடந்த 1957 ஆம் வருடம் முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பங்கு வர்த்தகத்திற்கு என ஒரு மணி நேரத்தை ஒதுக்கி முகூர்த்த டிரேடிங்கை அறிமுகம் செய்தது.
இதுபோல தேசிய பங்குச் பங்குச்சந்தையும் 1992 ஆம் வருடம் முதல் தீபாவளி நாளில் ஆரம்பமானது. இதிலிருந்து ஒவ்வொரு வருடமும் முதலீட்டாளர்கள் முகூர்த்த வர்த்தகத்தின் போது சிறப்பான முதலீடுகளை செய்ய முன் வருகிறார்கள். இப்படி செய்யும் அனைத்து முதலீடுகளும் நல்ல செழிப்பை தருவதாக இவர்கள் நம்புகிறார்கள் அதோடு லட்சுமி தேவியின் அருளால் நல்ல நாளாக அமையும் என்றும் முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள்.
தீபாவளி திருநாள் அன்று மேற்கொள்ளப்படும் முகூர்த்த வர்த்தக நாளில் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வது மங்களகரமானது என தெரிவிக்கிறார்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் நபர்கள். ஒவ்வொரு வருடமும் சிறிய முதலீட்டாளர்கள் முதல் பெரிய மற்றும் மூத்த முதலீட்டாளர்கள் வரையில் எல்லோரும் தவறாமல் முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள்.
இப்படி செய்வதன் மூலமாக சிறிய முதலீட்டில் அதிக லாபம் வழங்கும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது என்று சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
ஹலோ ஆகவே தான் ஒவ்வொரு வருடமும் தீபாவளி திருநாளில் ஒரு மணி நேரம் முதலீடு செய்வதற்கு ஒதுக்கப்படுகிறது ஆகவே இந்த வருடம் தீபாவளி தினத்தன்று நடைபெறும் முகூர்த்த ட்ரேடிங் எப்பொழுது நேரம் தொடர்பாக இங்கே நாம் அறிந்து கொள்ளலாம்.
தீபாவளி திருநாளில் நடைபெறும் முகூர்த்த ட்ரேடிங் இந்த வருடம் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது என் எஸ் இ மற்றும் பி எஸ் இ உள்ளிட்டவற்றில் ஈக்விட்டி டெடி வெட்டிங் பிரிவில் மாலை 6: 15 முதல் 7 15 வரையில் வர்த்தகம் நடைபெற உள்ளது அதோடு ப்ரீ ஓப்பனிங் செஷன் மாலை 6 மணிக்கு தொடங்கி 6.08 மணி அளவில் முடிவடைகிறது.
இதே போல கமாடிட்டி பிரிவில் மாலை 6.15 பதினைந்து முதல் 7.15 வரையில் வணிகம் செய்து கொள்ளலாம் இதில் தீபாவளி அன்று அதாவது அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி மாலை 7 25 வரையில் வர்த்தக பரிமாற்றம் செய்யலாம்.
அதோடு கரன்சி டெரிவேட்டிங் பிரிவில் மாலை 6:15 முதல் 7 15 வரையில் வணிகம் செய்து கொள்ளலாம். என்றும் இதற்கான வர்த்தக பரிமாற்றம் 7.25 வரையில் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தீபாவளி தினத்தன்று முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தேதியை மறந்து விடாதீர்கள்.