சேந்தமங்கலம் தொகுதியை கைப்பற்ற போகும் தேமுதிக.. பொன்னுசாமியின் இழப்பால் கிடைக்க போகும் வெற்றி!!

0
252
DMDK is going to win the Senthamangalam constituency.. Ponnusamy's loss will result in victory!!
DMDK is going to win the Senthamangalam constituency.. Ponnusamy's loss will result in victory!!

DMDK DMK: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. வான பொன்னுசாமி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் முதலில் அதிமுகவில் முக்கிய முகமாக இருந்தவர். அதற்கு பிறகு 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் சேர்ந்தார். 2016 ஆம்  ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பிறகு 2021 சட்டமன்ற  தேர்தலில் மனம் தளராத பொன்னுசாமி மீண்டும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் பொன்னுசாமியின் இறப்பு திமுகவிற்கு பேரிடியாக உள்ளது. இந்த முறையும் சேந்தமங்கலம் தொகுதியில் இவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்று விடலாம் என்பர் திமுக திட்டம் தீட்டி இருந்தது.ஆனால் இப்போது அவர் இறந்ததால் அவருக்கு பதிலாக சேந்தமங்கலம் தொகுதியில் யாரை நிறுத்தலாம், அவருக்கு பின் மக்களிடம் செல்வாக்கு கொண்டவர் யார் என்று திமுக ஆராய்ந்து வருகிறது.

2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை சேந்தமங்கலம் தொகுதியில் தேமுதிக தான் வெற்றி பெற்று வந்தது. 2021 தேர்தலில் திமுக வென்றதால் தேமுதிக அதிலிருந்து சற்று விலகியிருந்தது. இப்போது பொன்னுசாமியின் இறப்பால் தேமுதிக மீண்டும் சேந்தமங்கலம் தொகுதியை கைப்பற்ற என்ன செய்யலாம் என்று தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்த தொகுதியில் 2011 சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேமுதிகவை சேர்ந்த ர.சாந்தியை மீண்டும் வேட்பாளராக நிறுத்த வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் இந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் வாய்ப்பு குறைவு. அதனால் சேந்தமங்கலம் தொகுதியில் மீண்டும் கால் பாதிக்கும் சாத்திய கூறுகள் என்னவென்று பிரேமலதா ஆலோசித்து வருகிறார். 

Previous articleரசிகர்களின் அன்பு தொல்லையை தவிர்க்க விஜய் எடுத்த முடிவு.. ஜெயலலிதா ட்ரிக்கை பாலோ செய்ய போறாராம்!!
Next articleஅதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்திய பாமகவின் கோரிக்கை.. முழிக்கும் இபிஎஸ்!!