சைலன்ட் கில்லர் அதிமுக! சத்தமே இல்லாமல் கதறும் திமுக!

Photo of author

By Sakthi

வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேலைகளை ஆரம்பித்துவிட்டன இதில் திமுக சற்று கூடுதலாகவே விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பிலே பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது ஆனாலும் ஆளும் தரப்பில் இதுபோன்ற எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நடத்தப்படவில்லை ஆளும் தரப்பு அமைதியாகவே இருக்கிறது அந்த அமைதிக்குப் பின்னால் சில ஆக்கபூர்வமான பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கிறார்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள்.

தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே பிரச்சாரத்தை ஆரம்பித்ததில் திமுகவினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இப்பொழுது நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தங்களுடைய சொந்த பணத்தை செலவழிக்க வேண்டி இருப்பதால் திமுகவின் தலைமை மீது அவர்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். லட்ச லட்சமாக சேர்த்து வைத்திருப்பவர்கள் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூட அதை வெளியே எடுக்காவிட்டால் சரியாக இருக்குமா என்பதே இவர்களுடைய கேள்வியாக இருக்கின்றது. அதோடு கூட்டணி கட்சிகளுக்கும் அனேக பிரச்சனைகள் இருந்து வருகின்றது இந்த பிரச்சனையானது அடிமட்டம் வரையில் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

இது போன்ற பிரச்சினைகள் எதுவுமே இல்லாமல் எங்களுடைய கட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய நேரடியான கண்காணிப்பில் அமைதியான முறையில் தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன என்றும் ,முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனையின் அடிப்படையிலேயே வெற்றி வியூகங்கள் பிரிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் வேட்பாளர் தேர்விற்கு அதிகளவில் முக்கியத்துவம் தரப்பட்டு வருகின்றது மக்களிடம் நற்பெயர் இருக்கின்ற இளம் தலைமுறையினருக்கு அதிகளவு வாய்ப்பு கொடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்ட செயலாளர்கள் இடமும் பட்டியல் கேட்கப்பட்டு இருக்கின்றது. அதோடு எங்கள் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் குழுவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றது இவை அனைத்திற்கும் மேலாக உளவுத்துறையும் தன்னுடைய பங்கிற்கு எந்த தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றி அறிக்கை தயார் செய்து வருகின்றது.

இது போன்ற பட்டியல்களை வைத்தே வேட்பாளர்கள் தேர்வு நடைபெறும் எல்லா முறைகளிலும் தகுதிவாய்ந்தவர்களையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் உறுதியாக இருக்கின்றார். அதோடு சிபாரிசுகளை மட்டம் தட்டவும் அவர் முடிவு செய்து இருக்கின்றார் இதன் காரணமாக இப்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் பல பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் இருக்கின்றது ஒருசில அமைச்சர்களுக்கும் இதே நிலைதான் என தெரிவிக்கிறார்கள். அரசு செய்திருக்கும் பல நல்ல வேலைகளை மக்களிடம் எடுத்து தெரிவிக்கும் பணியை வேகவேகமாக ஆரம்பிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதிமுகவின் இணையதள குழு இந்த பணிகளை செய்ய ஆரம்பித்திருக்கின்றது.

கூட்டணி என்பது எவ்வாறு அமைந்தாலும் சரி 180 தொகுதிகளுக்கு குறைவில்லாமல் போட்டியிட வேண்டும் என்ற விஷயத்தில் முதல்வர் உறுதியாக இருக்கின்றார் இதை மையமாக கொண்டே அவர் காய் நகர்த்தி வருகின்றார். அமைதியான இது போன்ற நடவடிக்கைகள் நிச்சயமாக அதிமுகவிற்கு மீண்டும் வெற்றி வாய்ப்பை தேடி தரும் என்று தெரிவிக்கிறார்கள்.