DMK TVK: திமுக கூட்டணியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வைத்துள்ள கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை கூடுதல் தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் பெறுவோம் அதோடு சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கே.எஸ் அழகிரி வலியுறுத்தி கூறியிருப்பது பெரும் விவாதமாகியுள்ளது.
திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேலும் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனித்த அடையாளத்தை உருவாக்க வேண்டுமென தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து வலுவான கோரிக்கை வைப்பது அவர்களின் அடுத்த கட்ட அரசியல் யோசனையின் பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
இது சாதாரண கூற்று அல்ல, மறைமுகமாக காங்கிரஸ் தனது விருப்பத்தை காட்டும் சிக்னலாகவே இருக்கிறது என்றும் கூறுகின்றனர். இதனால் திமுக தனது கூட்டணியை காப்பாற்ற உறுதியாக இருப்பதால், காங்கிரஸின் கோரிக்கைகளை ஏற்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
அதே சமயம் விஜய்-காங்கிரஸ் உறவு கடந்த சில மாதங்களாக வலுப்பெற்று வருவதாலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிய தலைமுறை வாக்காளர்களை பெரிதும் ஈர்த்துள்ளதாலும் காங்கிரஸ்-விஜய் கூட்டணி அமைய சாத்தியமுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி அமைந்தால் திமுக-காங்கிரஸ் உறவு சீர்குலையும். அது தமிழக அரசியலில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு, திமுகவிற்கு வாக்கு எண்ணிக்கையில் குறைவு ஏற்படும்.