DMK TVK VCK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர் பார்த்திராத உச்சத்தை எட்டியுள்ளது. 2 மாபெரும் மாநாடுகளையும், 5 பிரச்சார கூட்டத்தையும் நடத்திய விஜய், 6 வதாக கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தவெகவின் எதிர் காலத்தை அடியோடு சறுக்கும் வகையில் அமைந்திருந்தது.
இதனால் விஜய்க்கான ஆதரவு குறையும் என்று நினைத்த சமயத்தில் தான் இது எதிர் மறையாகவே அமைந்து விட்டது. அப்போதும் கூட விஜய்யை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதிமுக, பாஜக போன்ற பல கட்சிகளும் முயன்று வந்தன. ஆனால் விஜய் அவரது முடிவில் தெளிவாக இருந்தார். இதன் காரணமாக தவெக உடன் எந்த கட்சி இணைய போகிறது என்ற கேள்வி மேலோங்கி இருந்தது. இந்நிலையில் தவெக உடன் இணைய திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆர்வம் காட்டி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து திமுக கூட்டணியில் நீண்ட காலமாக இருந்து வரும், விசிகவின் தலைவர் திருமாவளவனிடம் கேட்ட போது, தவெகவில் ஏற்கனவே சங்கிகள் ஊடுருவி வருவதாக கூறுகின்றனர். இதனால் விஜய் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அக்கறையாக கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியல் நகர்வுகளில் பாஜகவின் தலையீடு அதிகரித்துள்ளது. தவெக, பாஜக உடன் இணக்கமான தோற்றத்தை உருவாக்கினால் மக்கள் தவெகவை எதிரியாக தான் பார்ப்பார்கள்.
விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறினார். விஜய் திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு முன் திருமாவளவன் ஒரு முறை திமுக கூட்டணியில் தொடர்விர்களா என்ற கேள்விக்கு பார்க்கலாம் என்று பதிலளித்ததும், தற்போது விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதும் இவர் திமுகவை விட்டு விலகி தவெகவிற்கு செல்வதற்க்கான சாத்திய கூறுகளாக பார்க்கப்படுகிறது.

