2026 தேர்தலை முன்னிட்டு கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் யார் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் மேலோங்கி உள்ளது. மாநாட்டிற்கு பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட போவதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
முன்னர் அ.தி.மு.க , தே.மு.தி.க-விற்கும், மக்களவை தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் சீட் தராதது தொடர்பாக சச்சரவு நிலவி வந்தது. இதனால் அ.தி.மு.க விடம் இருந்து பிரேமலதா விஜயகாந்த் சற்று விலகியே இருந்தார். இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த், ஈ.பி.ஸ் என்னை முதுகில் குத்திவிட்டார் என்று கூறினார்.
இதனை மறுத்த பிரேமலதா விஜயகாந்த் நான் அவ்வாறு கூறவே இல்லை, ஊடகங்களின் விளம்பரங்களுக்காக நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாக சொல்லாதீர்கள், இது கண்டனத்துக்குரியது என்று கூறி இருந்தார். இவர் இவ்வாறு கூறியது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவரின் பேச்சு அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க ஏதுவாக உள்ளதாக கூறப்படுகிறது.
வரப்போகும் தேர்தலில் தே.மு.தி.க-விற்கு கூடுதல் சீட் ஒதுக்கினால் தே.மு.தி.க-அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாம். இது ரீதியாக ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரேமலதா விஜயகாந்தின் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்வாரா இல்லையா? இந்த இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டணி அமைக்குமா அமைக்காதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது கூட்டணி கட்சியாக உருவெடுத்தால் அது 2026-சட்டமன்ற தேர்தலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.