தொல்லை தந்த நெல்லையை பிரித்து எறிந்த! திமுக தலைமை கழகம்!

0
184

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நிர்வாக வசதி காரணமாக திருநெல்வேலி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை பிரித்து மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் திமுக மேலிடம் அறிவித்திருக்கின்றது.

இதுபற்றி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கின்ற செய்திக் குறிப்பு ஒன்றில், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, மத்திய திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் தொய்வில்லாமல் நடப்பதற்கும் வசதியாக திருநெல்வேலி கிழக்கு மத்திய திருநெல்வேலி தென்காசி தெற்கு தென்காசி வடக்கு என்று நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்படுகின்றன.

1.தென்காசி தெற்கு மாவட்டம்
சங்கரன்கோவில், தென்காசி, ஆலங்குளம்

2. தென்காசி வடக்கு மாவட்டம்

வாசுதேவநல்லூர், கடையநல்லூர்,

3.திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்

அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம்

4.திருநெல்வேலி மத்திய மாவட்டம்

பாளையங்கோட்டை, திருநெல்வேலி

திருநெல்வேலி கிழக்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, மத்திய திருநெல்வேலி ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் தொய்வில்லாமல் நடந்திடவும் , புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்டம், தென்காசி தெற்கு ,தென்காசி வடக்கு, ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் பொறுப்பாளர் ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்டம் பொறுப்பாளர் அப்துல் வகாப், தென்காசி தெற்கு மாவட்டம் போ. சிவ பத்மநாபன், தென்காசி வடக்கு மாவட்டம் பொறுப்பாளர் துரை, ஆகியோர் நியமிக்கப்பட்டு இருப்பதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருக்கின்றார்.

Previous articleவெற்றி கைக்கெட்டும் தூரத்தில் தான் இருக்கிறது – டிரம்ப் பரபரப்பு டுவிட்!
Next articleபுதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!!