அதிரடி அறிவிப்பை வெளியிட்ட துரைமுருகன்! கலக்கத்தில் சீனியர் நிர்வாகிகள்!

Photo of author

By Sakthi

திமுகவில் சென்னை வடக்கு கிழக்கு சென்னை மேற்கு சென்னை தென் மேற்கு ஆகிய மாவட்டங்களை பிரித்து நிர்வாகிகள் நியமனம் செய்துள்ளதாக திமுகவின் தலைமை அறிவித்திருக்கின்றது.

இது சம்பந்தமாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை வடக்கு மாவட்ட கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் சிறப்பாக நடைபெறவும், சென்னை வடக்கு, சென்னை வட கிழக்கு, சென்னை மேற்கு சென்னை தெற்கு, ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

1. சென்னை வட கிழக்கு மாவட்டம்

* மாதவரம்
* திருவொற்றியூர்

2. சென்னை வடக்கு மாவட்டம்
*ராதாகிருஷ்ணன் நகர்
*பெரம்பூர்
*ராயபுரம்

சென்னை வடகிழக்கு மாவட்டம்
பொறுப்பாளர்-எஸ்.சுதர்சனம்

சென்னை வடக்கு மாவட்டம்
பொறுப்பாளர்-இளைய அருணா

சென்னை மேற்கு மாவட்டம்
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர்

சென்னை தென் மேற்கு மாவட்டம்

தியாகராயர் நகர், மயிலாப்பூர்

சென்னை மேற்கு மாவட்டம்
பொறுப்பாளர்- சிற்றரசு

சென்னை தென் மேற்கு மாவட்டம்

பொறுப்பாளர்- மயிலை. வேலு ஆகியோர் நியமிக்கப்பட்டு இருப்பதாக திமுகவின் தலைமை அறிவித்து இருக்கின்றது.