DMK DMDK: தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தொடர்ந்து 7வது முறையும் ஆட்சி கட்டிலைப் பிடித்திட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தின் மூலம் மக்களை கவரும் பணியும், திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை ஒவ்வொரு வீடுகளிலும் கொண்டு சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியிலிருக்கும் காங்கிரஸும், விசிகவும் ஆட்சி பங்கையும், அதிக தொகுதிகளையும் கேட்டு வலியுறுத்து வந்தாலும், மற்றொரு புறம் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும், ஓபிஎஸ்யும் திமுக கூட்டணி உறுதியாக இருப்பதால், இந்த தேர்தலில் திமுக வெற்றி பெரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க, திமுக- தேமுதிகவுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்த பேச்சவார்த்தையில் பிரேமலதா திமுக தலைமையிடம் 20 தொகுதிகளுக்கு மேல் கேட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் திமுகவோ ஆரம்பத்திலிருந்து எங்களுடன் கூட்டணியில் பயணிக்கும் கட்சிகளான காங்கிரஸும், விசிகவும் அதிக தொகுதிகள் கேட்பதால், உங்களுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கறாராக கூறியுள்ளது. விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு அரசியலில் பின்தங்கிக் காணப்படும் தேமுதிகவுக்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால், ஒற்றை இலக்க தொகுதிக்கு சம்மதம் தெரிவிக்குமா, இல்லை தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

