பொறாமையில் பொசுங்கும் ஸ்டாலின்! செங்கோட்டையன் கிண்டல்!

Photo of author

By Sakthi

தொடர்ச்சியாக பொய் பிரச்சாரம் செய்து வரும் திமுக மக்களின் முன்பு நம்பிக்கை இழந்துவிட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார் தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்டம் டி நகர் பகுதிகளில் தேர்தல் பணி சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று உரையாற்றினார் அப்போது அவர் தெரிவித்ததாவது அதிமுக அரசு தமிழக மக்களுக்காகவும் தமிழக நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றது.

பலதுறைகளில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் இருக்கின்றது தொடர்ச்சியாக மத்திய அரசின் விருதுகளையும் தமிழகம் வாங்கி இருக்கின்றது.கொரோனா காலத்திலும் மிக அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது நோய் தொற்றை தடுப்பதில் தமிழகம் முன்னிலையில் இருக்கின்றது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் ஒவ்வொரு திட்டங்களாக கொண்டுவந்து அதனை நிறைவேற்றி வருகிறார்கள்.

அதிமுகவின் ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பார்த்து எதிர்க்கட்சித் தலைவரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை ஆகவே இந்த அரசின் மீது வேண்டுமென்றே பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றார். அவருடைய பொய் பிரச்சாரத்தை மக்கள் யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. மக்களுக்கு நன்மைகளைச் செய்யும் ஒரே இயக்கம் அதிமுக தான் என மக்கள் நினைக்கின்றார்கள். மக்கள் எப்பொழுதும் அதிமுகவின் பக்கம் தான் இருக்கிறார்கள் திமுக ஆட்சிக்கு வரவே இயலாது தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் இருக்கின்றன ஆகவே அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து மறுபடியும் அதிமுக ஆட்சியை மலர வைப்போம் இவ்வாறு அவர் தெரிவித்திருக்கின்றார்.