அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது உயர்கல்வியை மேற்கொள்ளவேண்டும் என்றால் அதற்கென்று அரசிடம் முறையான முன் அனுமதி பெற்றிருக்கவேண்டும்.இந்த முன்னனுமதி பெறாமல் உயர்க்கல்வி பெற்றதால் ஏறத்தாள 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொடக்ககல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இதனை எதிர்த்து திமுக சார்ப்பில் முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் திமுக எம்எல்ஏ-வும் ஆன தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார் .கல்ல்வித்துறை என்பது கருணையற்ற துறையாக மாரிவிடக் கூடாது என்றும் ,ஏற்கனவே இந்த அரசால் ஆசிரியர் சமுதாயம் பல வழிகளில் பாதிக்கப்பட்டு பல ஆசிரியர்கள் மீது வழக்கும் பதிவு செயயப்பட்டுளது.மேலும் தற்போது ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி கற்றுவிட்டார்கள் என்று அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிடவேண்டுமென்று திமுகவும்,ஆசிரியர் சங்கங்கள் சர்பாகவும்,சட்டப்பேரவைலும்,மக்கள் மன்றதிலும் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகின்றன.இருந்தபோதிலும் தமிழக அரசு பாரமுகப் பிடிவாத போக்குடனே நடந்துக்கொல்கிறது என்று அவர் குற்றம் சாடியுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்கனவே அவதிக்குளாகிருக்கும் ஆசிரியர்களுக்கு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல என்றும் மேலும் கல்விதுறை இந்த ஆணையை திருப்பி பெறவேண்டும் என்றும் திமுக சார்ப்பில் வலியுருதிகிறேன் என தங்கம் தென்னரசு அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் அவர் கல்வித்துறை ஒருபோதும் கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது!
வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்’
– என்ற குறள் மொழியினை எடுத்துக்காட்டி இதனை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.