சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் முக்கிய காரணம் 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது.
அதிமுக அரசு. பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. காரணம் திமுக இந்த சமயத்தில் ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம் என்பதைப் போல எங்கே எது நடந்தாலும் அதற்கு நாங்கள் தான் காரணம் என்பது போல சந்தனத்தை பூசி கொள்வது, இது போன்ற ஒரு கில்லாடி தனத்தை கையில் வைத்துக்கொண்டு ஒரு மாயத் தோட்டத்தை ஏற்படுத்தி மக்களிடையே தவறான தகவலை பரப்பி அதன் மூலமாக ஒரு ஆதாயத்தை தேடுகின்றன என தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.
புரட்சித்தலைவி ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகத்தான் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் 7 பேர் விடுதலைக்கான வெற்றியை திமுக எந்த சமயத்திலும் கொண்டாட முடியாது. திமுக மக்களிடம் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. இதற்கு திமுக எந்த விதத்திலும் ஒரு துரும்பை கூட கிள்ளி போட்டதில்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.
அத்துடன் நாளை நடைபெறவிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது. பொது பிரிவினரின் 10 சதவீத பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் திமுகவிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
தும்பை விட்டு வாழை பிடிக்கும் கதையாக சட்டமன்ற அனைத்து கட்சிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் துணைக்கு அழைக்கிறார். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடர்பாக ஆராய 2006 ஆம் வருடம் ஒரு ஆணையத்தை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு அமைத்தது.
அந்த ஆணையம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு ஏற்படுத்தியது. திமுக சார்பாக பதவியில் இருந்த மத்திய அமைச்சர்கள் ஒப்புதல் வழங்கிய சட்டத்தை தான் தற்போது அரசு நிறைவேற்றி உள்ளது. காரியம் ஆனவுடன் காலை வாரும் கொள்கை கொண்ட திமுகவின் தலைமை, தற்போது இந்த சட்டத்தை எதிர்ப்பதைப் போல நடித்து வருகிறது.
வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்த போது எடுத்து வைக்க வேண்டிய மாதங்கள் தொடர்பாக அனைத்து கட்சிகளையும் திமுக கலந்தாலோசிக்கவில்லை. அப்போது தான்தோன்றித்தனமாக வாதம் செய்து தற்போது மூக்கறுபட்ட பிறகு வழக்கின் தீர்ப்பு வந்த பின்னர் மற்ற கட்சிகளை அழைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். முதலமைச்சரின் இரட்டை வேடத்தை புரிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் அவருடைய கோரிக்கையை நிராகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.
அத்துடன் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற இந்த திமுகவின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுகவை பொறுத்தவரையில் எந்த ஒரு இட ஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்க கூடாது.
69% இட ஒதுக்கீட்டிற்கு பிரச்சினை வந்தபோது அது அரசியல் சாசன சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்த்து உறுதி செய்யப்பட்டது. புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி சட்ட பாதுகாப்பு ஏற்படுத்தி வழங்கிய 69% இட ஒதுக்கீட்டுக்கு வங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.