உதயநிதியின் து முதல்வர் பதவி.. கூட்டத்தில் எடுக்கப்போகும் முக்கிய முடிவு!! மாவட்ட செ வைக்கப்போகும் செக்!!

Photo of author

By Sakthi

 

 

திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(ஆகஸ்ட்16) காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் தொடக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய “தேர்தல் 40/40 தென்திசையின் தீர்ப்பு” என்ற நூலை வெளியிட்டார்.

இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் குறித்து ஆலோசனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களாகவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று பேசப்பட்டு வருகின்றது. இது குறித்து திமுக வட்டாரங்கள் நம்பிக்கையாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான் துணை முதல்வர் பதவிக்குத் தகுதியானவர் என்றும் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்றும் தெரிவித்து வந்தனர். இதற்கு மத்தியில் இது குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வர் ஆக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றதே தவிர அது பழுக்கவில்லை என்று கூறினார்.

ஆனால் அண்மையில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ கண்ணப்பண் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வர் என்று கூறினார். பின்னர் இப்பொழுது துணை முதல்வர் என்று கூறினால் தப்பாகி விடும். ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பின்னர் துணை முதல்வர் என்று அழைக்கலாம் என்று கூறினார். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்16) நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகின்றது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக கட்சியின் தொடக்கவிழா, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் பிறந்தநாள் விழா ஆகியவற்றை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தெரிகின்றது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களை அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகின்றது. அதாவது சென்னையில் மட்டும் மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்றும் பிற மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்றும் நியமிப்பது குறித்து பேசப்படவுள்ளது. ஏற்கனவே திமுக கட்சியில் 70 மாவட்ட செயலாளர்கள் இருக்கும் நிலையில் மீண்டும் மாவட்டச் செயலாளர்கள் அதிகரிக்கப்பட்டால் இது 115க்கும் அதிகமாகக் கூடும்.

இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிகின்றது. மேலும் எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் முக்கிய ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகின்றது.

அது மட்டுமில்லாமல் மத்திய பட்ஜெட் குறித்தும், மீனவர்களின் பிரச்சனைகள் குறித்தும், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கின்றது என்பது குறித்தும் பேசப்படும் என்று தெரிகின்றது. அது மட்டுமில்லாமல் மத்திய அரசுக்கு எதிராக பல முக்கிய கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிகின்றது.