திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

0
184

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளைய தினம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கின்றார்.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியில் தெரிகின்ற அறிவிப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் என்று தெரிவித்தார் துரைமுருகன்.

இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று துரைமுருகன் தெரிவித்திருக்கின்றார் மாவட்ட செயலாளர்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் சம்மந்தமாக ஆலோசிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 2 தினங்களாக பஞ்சாப் ஹரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த போராட்டம் ஏழாவது நாளான இன்று நடந்து கொண்டிருக்கும் போது டெல்லி புறநகர் பகுதியான புராரியில் சந்த் நிரங்கரி உத்திரப் பிரதேசம் ராஜஸ்தான் போன்ற மாநில விவசாயிகளும் போராட்ட களத்தில் ஆதரவாக இருக்கிறார்கள் விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது நிலையில் இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு இருக்கின்றது.

Previous articleஅழகிரி போட்ட அதிரடி திட்டம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!
Next articleரஜினியின் அரசியல் வருகை குறித்து தமிழருவி மணியன் கொடுத்த துருப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here