DMK: 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் இதனை தன் வசப்படுத்தி வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதனை கெடுக்கும் வகையில் திமுகவிற்கு எதிராக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. திமுகவின் எதிர்க்கட்சிகள் தான் இதனை கையில் எடுத்துள்ளது என்று நினைத்த சமயத்தில், அதன் உள்வட்டாரமும் சரி, கூட்டணி கட்சிகளும் சரி எதிர்கட்சிகளை பின்னுக்கு தள்ளி ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்றவை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இவர்கள் வேறு கட்சி தவுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலையில் தான், திமுகவின் மகளிரணியும் ஸ்டாலினிடம் ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளது.
இது குறித்து பேசிய திமுக மகளிரணி செயலாளர், ஜெ. ஹெலன் டேவிட்சனிடம் இந்த முறை இளையரணிக்கு அதிக தொகுதிகள் கேட்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய போது, நாங்களும் கேட்டிருக்கிறோம், மகளிரணிக்கு பொறுப்பேற்றுள்ள கனிமொழியும் உரிய முக்கியத்துவத்தை பெற்று தருவதில் உறுதியாக இருக்கிறார். எங்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு கூடிய விரைவில் அதிக தொகுதிகள் என்ற கோரிக்கை குரலை மகளிரணியும் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.