பாமக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திமுகவா? அதிர்ச்சியில் ஸ்டாலின் மகிழ்ச்சியில் பாமக!

0
135

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தெரிவித்து பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில், ஆறாவது கட்ட போராட்டமாக இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்து வருகிறது .

கிராம நிர்வாக அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டங்கள் நடைபெற்றது. போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசும் பங்கு பெற்றார்.

சென்னை உட்பட தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் நடந்துவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கின்ற வன்னியர்கள் மட்டுமல்லாமல் அதிமுக மற்றும் திமுக போன்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த வன்னிய பெருமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆம் இந்த போராட்டத்தில் பாமகவை சார்ந்தவர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து கட்சிகளை சார்ந்தவர்களும் பங்கேற்க வைக்க வேண்டும் என்றும் நம் கோரிக்கையானது எல்லா கட்சிகளிலும் இருக்கின்ற வன்னியர்களுக்கானது என்று டாக்டர் ராமதாஸ் அவர்களும், அன்புமணி அவர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள்.

இன்றைய தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த வன்னியர் சங்க கொடிகளுடன் அதிமுக, மற்றும் திமுக ,போன்ற கட்சிகள் கொடிகளும் ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்டது. இது தமிழ்நாட்டின் அரசியல் அரங்கத்தில் இருக்கும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. திமுக நிர்வாகிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது ஆனாலும் திமுகவும் ,பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழக அரசியலில் எதிரிகளாக இருந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தில் அந்த கட்சியின் கொடிகள் எவ்வாறு வந்தனர் என்ற சந்தேகத்தில் திமுகவின் கொடிகள் எப்படி வந்தது என்று அவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் தெரிவித்த பதில் ஆச்சரியத்தை உண்டாக்கியது.

நாங்கள் திமுகவோ அல்லது அதிமுகவோ இல்லை. நாங்கள் முதலில் வன்னியர்கள், மனிதர்கள் அதன் பிறகு தான் திமுக அதிமுக என்ற கட்சி பேதம் எல்லாம் இது வன்னியர்களுக்கான போராட்டம் ஆகவே அந்த உணர்வை வெளிக்காட்டுவதாக தான் நாங்கள் இதில் பங்கேற்று உள்ளோம் என்று சாதாரணமாக பதில் தெரிவித்து இருக்கிறார்கள் இதனை கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.

Previous articleஇந்தியா – பிரிட்டன் விமான சேவைக்கு தடை நீட்டிப்பு!
Next articleசசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த நிர்வாகி! அதிரடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ் ஓபிஎஸ்!