DMK: தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று அதிரடி முடிவுகள் வெளியானது. கிட்னி திருட்டு வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்பு சம்பவம் ஆகிய மூன்று முக்கிய வழக்குகளிலும் மாநில அரசின் செயல்பாடு குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கிட்னி திருட்டு வழக்கு தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை தமிழக அரசும் ஏற்றுள்ள நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள அதிகாரிகள் அரசு பரிந்துரைக்கும் என்று நிபந்தனை விதித்தது. உயர்நீதி மன்றம் அமைக்கும் அதிகாரிகளுக்கு அரசு ஏன் பயப்படுகிறது என்ற கேள்வியும் எழுப்பபட்டது. அடுத்து மறைந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.
திமுக ஆட்சியில் அரசியல் நோக்கத்துடன் விசாரணை தாமதப்படுத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது, அப்போது உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடை செய்ய மறுத்துவிட்டது.
மூன்றாவதாக கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கை எவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. ஒரே நாளில் டெல்லி முதல் மதுரை வரை திமுக அரசுக்கு எதிராக நீதித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் சிபிஐ விசாரணை உத்தரவு உறுதி செய்யப்பட்டால் மாநில அரசுக்கு பெரும் அவமானம் ஏற்படும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிக முக்கியமனவையாக பார்க்கப்படுகிறது.