Breaking News

திமுக தீய சக்தி இல்லை.. “கனிமொழிக்கு வாழ்த்து சொன்ன விஜய்”..

DMK has no evil power.. “Vijay congratulated Kanimozhi”..

DMK TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், பல்வேறு திருப்பங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தை ஆட்டம் காண வைத்துள்ளார். மேலும் திமுகவை அரசியல் எதிரி என்று கூறி கடுமையாக விமர்சித்து வரும் இவர், திமுக எம்பி. கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே திமுக தான் தவெகவின் ஒரே எதிரி, திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என எல்லா இடத்திலும் கூறி வருகிறார். பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் கூறியிருந்தாலும், திமுகவை மட்டுமே விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு ஈரோட்டில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கூட, திமுக ஒரு தீய சக்தி என்று கோஷமிட்டார். இவ்வாறான சமயத்தில் இன்று திமுக எம்பி. கனிமொழி பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி, தவெக தலைவர் விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.