TVK DMK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த வேகத்தை மேலும் கூட்டும் வகையில், தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திரமாக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். 2 மாபெரும் நாடுகளையும், 5 பிரச்சார கூட்டங்களையும் நடத்திய விஜய், மூன்று தினங்களுக்கு முன்பு புதுவையில் பொதுக்கூட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து, 18 ஆம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார்.
மேலும் பல இடங்களில் திமுகவையும், ஸ்டாலினையும் நேரடியாக விமர்ச்சித்திருக்கிறார். ஸ்டாலினை அங்கிள் என்றும், சிஎம் சார் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடியாக திமுக விஜய்யை தாக்கும் என்று நினைத்த சமயத்தில் அவர்கள் விஜய்யை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் புதிய கட்சியான தவெக மீது 70 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த திமுகவிற்கு பயம் வந்துவிட்டது என்று பலரும் விமர்சித்து வந்தனர். இதற்கு ஏற்றார் போல தான் திமுகவின் நடவடிக்கையும் இருந்தது.
மேலும் ஸ்டாலின் ஒரு முறை, பழைய எதிரிகள் என்று அதிமுகவையும், புதிய எதிரிகள் என்று தவெகவையும் எதிரி பட்டியலில் சேர்த்தது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் திமுகவிற்கு விஜய்யை பார்த்து பயம் என்பது உறுதியானது. இந்நிலையில் அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், வேளாண்துறை அமைச்சர், எம்.ஆர்.கே. பன்னிர் செல்வம் , செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்று வந்து இன்றைக்கு முளைத்த காளான்கள் எல்லாம், திமுகவை அளிப்பேன் என்று சொல்வதற்கு தகுதியற்றவர்கள் என்று விஜய்யை மறைமுகமாக சாட்டியிருந்தார். இவரின் இந்த கருத்து தவெக மேலுள்ள பயத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

