கரூர் பிரச்சாரத்தை முன்னிறுத்தி திமுக நடத்தும் பிரச்சாரம்.. விஜய்யிக்கு தொடரும் சிக்கல்!!

0
162
DMK is running a campaign in front of the Karur campaign.. Vijayi will continue to have trouble!!
DMK is running a campaign in front of the Karur campaign.. Vijayi will continue to have trouble!!

DMK: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் திமுகவிற்கு எதிராக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கியது முதலே தனது அரசியல் எதிரி திமுக தான் என்றும் கூறி வருகிறார்.

மேலும் தவெகவிற்கும், திமுகவிற்கும் உள்ள ஒரே பலம் இளைஞர்கள் தான். அது தற்போது விஜய்க்கு அதிகரித்து வருவதால், திமுகவின் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட கூடும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் தவெக சார்பில் நடந்த கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட இழப்புகள் திமுகவிற்கு இன்னும் சாதகமாகவே முடிந்துள்ளது என்றே கூறலாம்.

இந்த விவகாரத்தை கையிலெடுத்த திமுக அரசு தனி நபர் குழு அமைத்ததோடு அல்லாமல், இளைஞர்களை முன்னிறுத்திய பிரச்சாரத்தை கோவையில் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த இளைஞர் அணி மண்டல மாநாடு கோவையில் 12ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தவெகவிற்கு திரளும் இளையஞர்களின் கூட்டத்தை போல, திமுகவிலும் வலிமைப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இது அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் கரூரில் நடந்த இழப்புகள் போல வேறு எங்கும் நிகழ கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும், ஒரு கூட்டத்தை எவ்வாறு வழி நடத்த வேண்டும், வழிகாட்டு நெறிமுறைகளை எவ்வாறு அமைக்க வேண்டும், என்பதை உறுதி செய்யும் நோக்குடன் இது நடைபெறும் என்றும் திமுக சார்பில் கூறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் திமுகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்டு வரும் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோரும் கலந்துக் கொள்ள போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

Previous articleஇபிஎஸ்க்கு எதிராக செயல்பட்டால் தோற்று தான் போவார்கள்.. ராஜேந்திர பாலாஜியின் பகீர் பேட்டி!!
Next articleவிஜய்யின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்த கண்டனங்கள்.. முழிக்கும் விஜய்!!