DMK DMDK: 2026 தேர்தலையொட்டி தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்று திமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக கூட்டணி கட்சிகள் தங்களுக்குரிய ஆட்சி பங்கையும், தொகுதிகளையும் ஒதுக்க வேண்டுமென்று திமுக தலைமையை வலியுறுத்தி வருகின்றன.
இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுவதாக கூறி வந்தனர். இந்நிலையில் தேமுதிக, திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக கூட்டணியில் இணைய சில நிபந்தனைகளை முன் வைத்ததாகவும், அது குறித்து திமுக தலைமை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த நிபந்தனை என்னவென்றால் பொதுவாக திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள், உதயசூரியன் சின்னத்தில் தான் தேர்தலை எதிர் கொள்வார்கள். ஆனால் தேமுதிக அவர்களது சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும், தேமுதிகவிற்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.
திமுகவின் உட்கட்சி பூசலை பயன்படுத்தி கொண்டு பிரேமலதா விஜயகாந்த் இந்த நிபந்தனையை விதித்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஏற்கனவே கூட்டணி கட்சிகள் கூட்டணியை விட்டு விலகுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தேமுதிகவின் இந்த வாய்ப்பையும் தவறவிட்டால் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை தழுவும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.