BJP TVK DMK: கரூரில் ஏற்பட்ட இழப்புகளை வைத்து பல்வேறு கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றன என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த துயர சம்பவத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என திமுக கேட்டு கொண்டது. ஆனால் அதை திமுக அரசே மீறுவது தான் வேடிக்கையாக உள்ளது. இந்த விஷயத்தில் திமுக நேரடியாக காய் நகர்த்தாமல் கூட்டணி கட்சிகளை வைத்து விஜய்க்கு எதிராக ஊடகங்களிடம் பேசி வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் விஜய்க்கு ஆதரவு குறையும் என்று எதிர்பார்த்த சமயத்தில் தான், மக்கள் மத்தியில் விஜய்க்கு அனுதாபம் பெருகியுள்ளது. இந்த விமர்சனம் விஜய்யை அதிமுக, பாஜக பக்கம் தள்ளும் சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் கரூர் விவகாரம் தொடர்பாக பாஜக அமைத்த 8 பேர் கொண்ட குழு திமுகவிற்கு எதிராக சில ஆதாரங்களை திரட்டி இருப்பதாக விஜய்யிடம் அமித்ஷா கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து விரிவாக பேச இவர்கள் இருவரும் கூடிய விரைவில் நேரில் சந்திக்க போவதாகவும், தகவல் கிடைத்துள்ளது. திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற ஒரே நோக்குடன் செயல்பட்டு வரும் பாஜக அதற்கு எதிரான ஆதாரங்களை சேகரிப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கரூரில் தற்போது விஜய்க்கு எதிரான சில செயல்பாடுகள் நடைபெற்று வருவதாக, அமித்ஷா கூறியதால் தான் விஜய் இன்னும் கரூருக்கு செல்லாமல் இருக்கிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது.